ஸ்ரீ ராகவேந்திரர் மகிமை
ஸ்ரீ ராகவேந்திரர் ஆன்மிக விழிப்புணர்வுக்கு மக்களைப் பெருமளவில் ஈர்க்கத்
துவங்கிய காலம். அவருடைய தத்துவங்களைப் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டனர் என்றாலும்,
அவருக்கு எதிர்ப்பும் இல்லாமல் இல்லை. ஆனால் எதிர்ப்புச் சம்பவங்கள் அனைத்துமே
அவருடைய மகிமையை மேம்படுத்தினவே அன்றி, எந்த வகையிலும் அவருக்குத் தலைகுனிவை
ஏற்படுத்திவிடவில்லை.
அவ்வாறு அவரையும் அவருடைய ஆன்மிக பிரசாரங்களையும் எதிர்த்த ஒரு குழுவினர், அவரை
அவமானப்படுத்த நினைத்தார்கள். தங்களுக்குள் ஒருவனை இறந்தவன் போல நடிக்கச்
சொன்னார்கள். அவனைத் தூக்கிக்கொண்டு ராகவேந்திரரிடம் வந்தார்கள். "ஐயா இவன்
எங்கள் தோழன், திடீரென்று காலமாகிவிட்டான். அவனுடைய மனைவியார்
துயருற்றிருக்கிறார்கள். இவனைப் பிழைக்க வையுங்கள்" என்று கெஞ்சிக்
கேட்டுக்கொண்டார்கள். ஆனால் ராகவேந்திரரோ, "இறந்தவன், அப்படியே இறந்தவனாகவே
இருக்கட்டுமே!" என்றார். அவ்வளவுதான், நடித்தவன் நிஜமாகவே காலமாகிவிட்டான்.
எதிர்ப்புக் குழுவினர் அதிர்ச்சியடைந்தார்கள். குறிப்பாக நடித்தவனின் மனைவி பெரியதாக
குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.
அதைப் பார்த்த ராகவேந்திரர் மெல்ல சிரித்தார். நடிகனைப் பார்த்து,
'எழுந்திரு' என்றார்.
அவன் பளிச்சென்று எழுந்து உட்கார்ந்தான். எல்லோரும் ராகவேந்திரரைத் தொழுது
வணங்கினர்.