எல்லா மதத்தினருக்கும் அருள் பாலிப்பவர்

"''1595-ல் தமிழ்நாட்டில் பிறந்த ராகவேந்திரர், 1621-ல் சன்யாசம் பெற்றார். 1671-ல் ஜீவசமாதி அடைந்தார். அதற்கு முன்பாகவே இப்போதுள்ள மந்த்ராலய இடத்தை சித்திமசூத்கான் என்கிற முஸ்லிம்தான் ராகவேந்திரருக்கு கொடுத்தார். ஆங்கிலேயர்கள் நிலச்சுவாரி சட்டம் கொண்டு வந்தனர்.

அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த செயின் தாமஸ் மன்றோ, மந்த்ராலய இடத்தைக் கைப்பற்றுவதற்காக 1820-ல் பிருந்தாவனம் போனார். அந்த தருணத்தில் ஜீவசமாதியிலிருந்த ராகவேந்திரரே மன்றோவிடம் பேசினார். அதைத் தொடர்ந்து, இந்தத் தலத்தின் மகத்துவம் புரிந்து, மந்த்ராலயா நிலத்தை கபளீகரம் பண்ணும் எண்ணத்தை மன்றோ கைவிட்டார்.

இதை நான் சொல்லவில்லை; மன்றோவே 1904- வருஷத்திய தன்னுடைய நிலச்சுவாரி ஃபைலில் எழுதி உள்ளார்.முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் எல்லா மதத் தினருக்கும் அருள் பாலிப்பவர் ராகவேந்திரர். எல்லா மதத்தினரும் மனமுருகி வேண்டுவதை நிறைவேற்றி வைப்பவர்."

0 கருத்துக்கள்: