"எல்லோராலும் வணங்கத்தக்க கருணையே உருவான அடியார்களின் மனோபீஷ்டங்களை ஈடேற்ற வல்ல ஸ்ரீ ராகவேந்திரரை நான் கற்பக விருக்ஷமாகவும், காமதேனுவாகவும் எண்ணி வணங்குகிறேன். அவர் பொய்யர்களை அழிக்கவல்ல சுடரொளிக் கதிரவனாகவும், விஷ்ணு பக்தர்களைப் பரிந்து வந்து காக்கும் தண்ணொளியைச் சொரியும் நிலவாகவும் திகழ்கிறார்."